என்னைப் போலொரு மானிடன் என்னை
எப்படித் தாழ்த்தலாம் தோழா?–அவன்
அன்னை போலவே என்னையும் அன்னை
ஆக்கினள் நானென்ன கீழா?
ஆணை செலுத்தவும் ஆளவும் இங்கே
ஆவி அவன் எடுத்தானா?–பிச்சைப்
பானை ஏந்திய கையனாம் இந்தப்
பாவி பிறந்து வந்தேனா?
காற்று வாளிலே சிட்டுக்கள் கண்டேன்!
களிப்பினில் என்னை மறந்தேன்!–இன்பம்
ஏற்று மறுபொழுதென்கரம் பார்த்தேன்!
இருகை விலங்கோ டிருந்தேன்!
அஞ்சி நடுங்கியும் நெஞ்சம் பதைத்தும்
ஆயுள் கழிந்தது தோழா!–உயிர்
கொஞ்சம் இருந்தது... கூறடா இந்தக்
கொடுமைக்குப் பே ரென்ன ஊழா?
என்ன தமிழனோ? ஏன் பிறந்தேனோ?
என்னடா அடிமையின் வாழ்வு?–சீச்சீ
இன்னோர் மனிதனுக் கூழியஞ் செய்தேன்
இருப்பதிலும் நன்று சாவு!
-காசி ஆனந்தன்று
How could a fellow man
just like me
degrade me, brother?
Just like his mother,
mine bore me,
what am I, beneath him?
Did he take this birth,
just to command
and rule this land?
Was this sinner birthed,
just to bear
a beggar’s pot in my hand?
I saw sparrows in the sky’s breeze,
and forgot myself in the bliss —
with lifted spirits,
I looked to my hands,
and found shackles
on my wrists.
Between fearful tremors
and my anguished heart,
my existence was spent, brother!
Only a little life remained…tell me,
Could the name of this cruelty be
oozh?*
Why was I born?
Why as a Tamizhan?
What is this life of servitude? Shame!
To another man, I am enslaved.
Better yet death than this life.
*Oozh: In ancient Tamil societies, oozh denotes past deeds from previous births that influences one’s current fate.

